Pages

Friday, 15 March 2013

களத்தில் இறங்கிய சிம்பு ..!

நடிகர் சிலம்பரசன் மாணவர் போராட்டத்தில் இணைந்தார்

அந்த கட்சி மிரட்டுவாங்களோ.... இந்த கட்சி புடிப்பாங்களோன்னு பயப்பிடாமல் கலத்தில் இறங்கினான் பார்.... நீ சிங்க தமிழண்டா....

நான் உன் ரசிகனில்லை... 

ஆனால் இப்போது உன்னை ரசிக்கிறேன்....



ஒன்பதுல குரு - விமர்சனம்


சில படங்களில் பழைய ஹிட்டான படங்களின் பாடல்களை அல்லது காட்சிகளை அல்லது வசனத்தை அல்லது பெயர்களை என ஆங்காங்கே காமெடிக்காக பயன்படுத்துவார்கள். அதை இந்தப் படத்தின் டைரக்டர்(பி.ஆர்.ஓ வாக இருந்து டைரக்டரான) பி.டி.செல்வக்குமார் ரொம்ப நாளாய் கவனித்திருப்பார் போலிருக்கிறது.
ஓ காமெடின்னா அது இதுதானா என கண்டுபிடித்துவிட்ட மகிழ்ச்சியில் நானும் ஒரு காமெடிப்படம் எடுக்கிறேன் என்ற பெயரில் இதுவரை வந்த தமிழ்சினிமாக்களின் ஒட்டுமொத்த டைரக்டரியை எடுத்துக்கொண்டு, அதில் வரும் பெயர்கள், காட்சிகள், வசனங்கள், ஷாட்கள், காஸ்ட்யூம்கள், இன்னபிற சமாச்சாரங்கள் என சகட்டுமேனிக்கு எடுத்து ரெண்டரை மணி நேரத்துக்கு ரொப்பி இதுவும் ஒரு படம் நானும் ஒரு டைரக்டர் என வந்து நிற்கிறார். நமக்கெண்ணவோ "ஏய் பாத்துக்க நானும் ரவுடி நானும் ரவுடி" என்ற வடிவேலுவின் குரல்தான் காதுக்குள் ஒலிக்கிறது.

பில்லா, ரங்கா, கோச்சடையான், குரு என நாலு நண்பர்களாம்(அதாவது 4 இடியட்ஸாம்). ரங்கா எனப்படும் சத்யன் ஓப்பனிங்கில் காக்க காக்க உயிரின் உயிரே பாடல் ஒலிக்க அதே உடையில் ஒரு பொண்ணை பீச்சில் துரத்திக்கொண்டு, தாவி மண்ணில் விழுந்துகொண்டு என.. அது கனவாம். விழித்தால் அவரது மனைவியான அந்தப்பெண் சூர்யாவுக்கு ஆசைப்பட்டு முடியாமல் சத்யனை கல்யாணம் பண்ணிக்கொண்டாராம். சத்யனை சூர்யா போல 6 பேக் கொண்டுவருவதற்காக அந்தப் பொண்ணும் அவரது அம்மாவான பழைய நாயகி மந்த்ராவும் சத்யனை யோகா, ஜிம் என டார்ச்செர் பண்ணுகிறார்களாம். அவர்கள் வீட்டில் அடிமையாய் வாழ்ந்து புலம்பிக்கொண்டிருக்கும் இந்த ரங்கா சத்யன் ஒரு புறம்.

கோச்சடையானாய் வரும் அரவிந்த் ஆகாஷ். ரொம்ப மாடர்னான ஒரு பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கொண்டிருக்க, அந்தப் பெண் வீட்டுக்குள்ளேயே ஏதோ குத்தாட்ட நடிகை போல உடையுடுத்திக்கொண்டு, பீட்சா ஆர்டர் பண்ணி சாப்பிட்டிக்கொண்டிருக்க அரவிந்தின் அப்பாவுக்கு அந்தப் பொண்ணை புடிக்கவேயில்லை. மனைவியும், அப்பாவும் இரு பக்கமாய் நின்று யார் வேண்டும் என கேட்க யாருமே வேணாம் என்று விட்டு சரக்கடித்து ஃப்ளாட்டாகி கிடக்க, அப்படி கிடக்கும் போதும் காக்க காக்க ஓப்பனிங் சீனை இமிடேட் பண்ணுகிறார். இவர் ஒரு பக்கம்.

பில்லா எனப்டும் வினய்.. பல இடங்களில் அஜீத்தின் பில்லா சீன்களை மொக்கையாய் இமிடேட் செய்து காமெடி பண்றேன் எனக் கடுப்பேத்திவிட்டு கடைசியில் வேலு நாயக்கர் வீட்டு கல்யாணத்தில் மாப்பிள்ளை ஓடிவிட சொத்துக்காக வினய்யின் அப்பா வினய்யை மாப்பிள்ளையாக்க ரொம்ப குண்டான பெண்ணை கட்டிக்கொண்டு புலம்பித்தள்ளுகிறார் இன்னொரு புறம்.

இவர்களோடு கொஞ்சம் தூரத்து நன்பரான சார்லஸ்(பிரேம்ஜி அமரன்) அவரது டீச்சரான சோனாவை கரெக்ட் பண்ணி அக்னி நட்சத்திரத்தில் வரும் அந்த நிரோஷாவின் பீச் பாடலை இமிடேட் செய்து பின் பாரதிராஜாவின் படங்கல் சிலவற்றிலிருந்து சீன்களை உப்புமா பண்ணிவிட்டு, இருவரும் ஓடிப்போக முடிவு பண்ணி அடுத்த நான் சென்ட்ரல் ஸ்டேசனில் சந்திக்க முடிவு. சில லட்சங்கள் பண உதவி கேட்கும் பிரேம்ஜிக்கு இந்த பில்லா, ரங்கா, கோச்சடையான் கோஷ்டி தருவதாய் சொல்லி கடைசியில் காசில்லை என காமெடி பண்ணிவிட, பிரேம்ஜிக்காக 3 நிமிடங்களுக்கு மேல் காத்திருக்க பொருமையில்லாத சோனோ இன்னொரு சோனங்கியுடன் செட்டிலாக.. விரக்தியான பிரேம்ஜி மனமுடைந்து சேலஞ்ச் செய்துவிட்டு காணாமல் போகிறார்.

குரு எனப்படும் சாம்ஸ். அவருக்கு கல்யாணம்.. ஆனால் மற்ற 3 நன்பர்களும் மனைவிகளை விட்டு விட்டு பேச்சிலர்களாய் வாழலாம் என முடிவெடுத்து பெங்களூர் போக முடிவெடுக்க, சாம்ஸும் கூட இணைந்து கொள்ள..
இரண்டாவது பாதியில் பெங்களூர் போய் நடக்கும் கண்றாவி காட்சிகளை நீங்கள் தியேட்டரில் போய் பார்த்துக்கொள்ளுங்கள்.

நேரடியாகவே விசயத்துக்கு வருகிறேன். இதுவரை பலவிதமான மொக்கை படங்களை பார்த்திருக்கிறேன். இருக்கதுலயே படு த்ராபையான படங்களையெல்லாம் பார்த்தவன் என பெருமைப்பட்டிருக்கிறேன். ஆனால் அதெல்லாம் உண்மையில்லை என்பது இன்றுதான் புரிந்தது. தமிழ் சினிமா வரலாற்றிலேயே படு மொக்கையான படத்திற்கான இலக்கணத்தை மாற்றியமைத்து மொக்கைகளின் முடிசூடா மன்னன் பட்டத்தை பெற்று முதலிடத்தைப் பிடிக்கிறது இந்த ஒன்பதுல குரு படம். இதைப் படம்னு சொல்றதுக்கே கொஞ்சம் தயக்கமாத்தான் இருக்கு.

'தமிழ்படத்'துல பல படங்களை ஓட்டி ஜெயிச்சுட்டாங்க.. நாமளும் அந்த மாதிரி ஒண்ண பண்ணிடலாம்னு நினைச்சிருப்பாங்க போல. பாவம்.. புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுகிட்ட மாதிரி ஆயிடுச்சு கதை. சாரி இந்தப் படத்தை பத்தி பேசும் போது கதை என்ற வார்த்தையெல்லாம் உபயோகப்படுத்தக்கூடாது. அதற்கான வாசணையே இங்கு இல்லை. அப்புறம் எங்கே திரைக்கதையெல்லாம்.

ஏதோ ஏமாந்து தியேட்டருக்குள்ள வந்துட்டோம்ங்கிற ஒரே காரணத்துக்காக இப்படி 20 தடவை ஷேவ் பண்ண ப்ளேடு, துருப்பிடிச்ச ஆக்ஸா ப்ளேடு, பழைய ரம்பம், மழுங்கிப்போன உழி, மாஞ்சாக்கயிறு என எல்லாவித ஆயுதங்களோடும் சகட்டுமேனிக்கு நம்மை அறுத்துத்தள்ளிகிறார்கள். தியேட்டரை விட்டு வெளியே வந்தால் ஒரு நிமிடம் ரத்த ஆறு ஓடுவதைப் போல ஒரு பிரம்மை வரத்தான் செய்கிறது.
இந்தப்படத்தின் ஓப்பனிங் பாடலில் வரும் பவர்ஸ்டாருக்கு வேண்டுமானால் ஒன்பதில் குரு இருக்கலாம். ஆனால் படத்தை எடுத்த தயாரிப்பாளருக்கும் படம் பார்க்கும் நமக்கும் எல்லாப்பக்கமும் ஏழரை தான். இதுல பார்ட் 2 வேற வருதுன்னு கடைசில ஒரு குண்டத்தூக்கி போடுறாங்க பாருங்க...ஷ்பாஆஆஆ. நெசமாத்தான் சொல்றாங்களா இல்ல விஸ்வரூபம் படத்தை கிண்டல் பண்றாங்களாண்ணு தெரியலை. கடவுள்தான் காப்பாத்தனும்.

பாலாவின் பரதேசி - விமர்சனம்

மிழ் சினிமா வரலாற்றில், ஏன் இந்திய சினிமா வரலாற்றில் திரைப்பட கலையின் உச்சகட்டத்தை தொட்ட மிகச்சில படங்களில் இந்த பரதேசியும் ஒன்று.
தமிழர்களாகிய நாம் தினம் தினம் 3 முறை, 6 முறை அதுக்கும் மேலே என இஷ்டத்துக்கு அருந்தும்  டீ-க்குப் பின்னால், அது எப்படி நம்மீது திணிக்கப்பட்டது.. அதற்காக அப்பாவி ஏழை மக்கள் எப்படி ஏமாற்றப்பட்டார்கள்.. எப்படி வஞ்சிக்கப்பட்டார்கள் என்ற ஒரு கதை இருக்கிறது என்பதே மிரட்சியாய் இருக்கிறது.
ஒரு வருமானமில்லாத சுதந்திரமான ஏழைகளாய் ஆட்டம், பாட்டம், கேலி கூத்து என வாழ்ந்தவர்கள் வருமானத்தை தேடும் சூழ்நிலையில் எப்படி கொஞ்சம் கொஞ்சமாய் கொடூரமாய் கொத்தடிமைகளாய் மாற்றப்பட்டார்கள் என்பதை ஒரு நெஞ்சைக் கசக்கிப்பிழியும் அனுபவமாய் தருகிறார் பாலா.
கஷ்டப்படும் ஏழைகளுக்கு வேலை தரும் பெரிய மனிதர் கருங்காணியாய் வரும் அந்த நடிகரின்(ஜெர்ரி.. உல்லாசம், விசில் படங்களை இயக்கிய இரட்டை இயக்குநர்கள் ஜேடி-ஜெர்ரியில் ஜெர்ரி) சிரிப்பில் துவங்குகிறது அந்த பச்சைத் துரோகம். 48 நாட்களாய் நடந்து டீ எஸ்டேட்டுக்கு போகும் அந்த பயணமும் அதன் பின்னனியில் வரும் பாடல் வரிகளும் பஞ்சம் பிழைக்கப் போவதன் வேதணையை அப்பட்டமாய் காட்டுகின்றன. அதனைத் தொடர்ந்து வரும் அடுத்தடுத்த ஒவ்வொரு நிமிடமும் நம்மை உலுக்கும் காட்சிகள். டீ எஸ்டேட்டுக்கு வந்துவிட்டோம்.
இனி எல்லாம் நல்லபடியாய் இருக்கும் என்ற அவர்களின் நம்பிக்கையில் கொஞ்சம் கொஞ்சமாய் ஊற்றப்படும் விஷம் தான் மொத்தக்கதையும். அதை விவரிப்பது நியாயமில்லை. பார்த்தால் மட்டுமே அந்த அனுபவம் புரியும்.

ஒரு சிறந்த படம் ரசிகனை என்ன செய்துவிட முடியும்? பார்ப்பவனை கதைக்குள் இழுந்து, உணர்வுகளை உள்வாங்கச்செய்து, நெஞ்சைப் பிழிந்து, கலங்கடித்து, அந்தக்கதையின் வாழ்க்கையை நாமும் வாழ்வதைப்போன்ற ஒரு அனுபவத்தைக் கொடுத்து.. அந்த சுக துக்கங்களை நம்மையும் உணரச்செய்து.. நாம் இதுவரை அலட்சியமாய் இருந்த சில விசயங்களையும் நமக்கு உணர்த்தி, சில நேரங்களில் நம்மை நாமே கேள்வி கேட்க வைத்து, போகப்போக எந்தக் கேள்வியும் இல்லாமல் படத்தை மெய்மறந்து பார்க்கும் அனுபவத்தைக் கொடுக்கும். அப்படி ஒரு படத்தை எடுக்க மிகச்சிறந்த ஒரு கலைஞனால் தான் முடியும். தான் அத்தகைய கலைஞன்தான் என மீண்டும் நீரூபித்து, நான் கடவுள், அவன் இவன் போன்ற படங்களில் சற்று கீழே இறங்கியிருந்த பாலா இந்த பரதேசி மூலம் சிம்மாசனத்தில் ஏறியமர்கிறார்.
அதர்வாவுக்கு இந்த ஒரு படம் போதும். கடைசி காட்சியில் அவரின் கதறல் ஒன்றே போதும்.. சில பல விருதுகளை அள்ளிக்குவிக்க. விக்ரம், சூர்யா வரிசையில் தமிழ் சினிமாவின் முக்கியமான ஹீரோக்களில் ஒருவராய் இவரையும் மாற்றிவிட்டார் பாலா.
வேதிகாவா இது. ட்ரையிலரில் பார்த்திருந்தாலும் படத்தில் முழு காட்சிகளில் பார்க்கும் போது இப்பவும் அவரின் உண்மையான முகத்துடன் இந்த முகத்தை ஒப்பிட்டே பார்க்க முடியாத அளவுக்கு மாற்றம். துறுதுறுவென அதர்வாவை துரத்திக் காதலிப்பதில் உற்சாகமாய் இருக்கிறார்.
தன்ஷிகாவுக்கு நல்ல அழுத்தமான பாத்திரம். கண்களாலேயே பல அர்த்தங்களை பேசி விடுகிறார். தொடர்ந்து பல தரமான படங்கள் இவரைத் தேடி வருவது கவனிக்கத்தக்கது.
உலகத்தரமான படமென்றால் அது ஏதோ ஹாலிவுட் படங்களின் லொகேசன்களையும், ஷாட்களையும், அவர்களின் கருத்துக்களையும் அப்படியே எடுத்து ஒப்பிப்பதில்லை.. நம் கதையை படமாக்கி அதை உலகமே பார்க்கச்செய்வது என கமலஹாசனுக்கும் பாடம் எடுக்கிறார் இந்த பாலா.
அந்தனை நடிகர்களும் நடிப்பை பற்றிய நினைப்பேயில்லாமல் படம் பார்க்க வைக்கிறார்கள். செழியனின் கேமரா முதல் ஷாட்டிலிருந்து கடைசி ஷாட் வரை கதையை இன்னும் கணமாக்கித்தருகிறது. ஜி.வி.பிரகாஷ் இந்தப் படத்தின் தரத்தையறிந்து அதற்கேயுரித்தான இசையை பிரம்மாதமாய் கொடுத்திருக்கிறார்.

இந்தப் படம் தமிழ்நாட்டில், இந்தியாவில் மட்டுமில்லை உலகில் எங்கேல்லாம் சினிமா ரசிக்கப்படுகிறதோ அங்கே எல்லாம் கௌரவிக்கப்படவேண்டிய படைப்பு.

இனி ஒவ்வொரு முறை டீ குடிக்கும் போதும் கொஞ்சம் உறுத்தல் வரத்தான் செய்யும். கேரளாவுக்கு டூர் போய் அந்த தேயிலைத்தோட்டங்களை பார்க்கும் போது வியப்பைத்தாண்டிய ஒரு வேதனை வரத்தான் செய்யும்.

நோ பீலிங்க்


உண்மை

இந்த பதிவு தமிழர்களுக்கும், இந்தியர்களுக்கும் ஆனது,
அல்லாதவர்கள் தயவு செய்து படிக்க வேண்டாம்..


##
ஒரு இந்தியருக்கு எப்பொழுது நாட்டு பற்று வரும்??
.
.
தன் நாட்டு அணி க்ரிக்கெட்
விளையாட்டில் தோற்கும்
பொழுது
(குறிப்பு: மற்ற
விளையாட்டுகளில் அல்ல)

##
ஒரு தமிழருக்கு எப்பொழுது மொழி பற்று வரும்??
.
.
உலகத்திலேயே பழமையான
மொழி தமிழ்
மொழி என்றும், மிகத்
தொன்மையான நாகரீகமும்,
அரசியலமைப்பு கொண்டவர்கள்
தமிழர்கள்
என்று வெள்ளைக்காரன்
ஆராய்ந்து சொல்லிய பிறகு.
(குறிப்பு: ஆனால் தன்
பிள்ளை ”டாடி”
என்று அழைக்காமல் “அப்பா”
என்று அழைத்தால் கோபம்
வரும்).

##
சரி ஒரு தமிழருக்கு எப்பொழுது இனப்
பற்று வரும்??
.
.
அது தம்முடைய
பக்கத்து வீட்டுக்காரன்
(ஒரே இனத்தவன்)
அடி வாங்கியப் பிறகு,
அடுத்து நாம் தான் என்ற
நிலை வரும் பொழுது..
(குறிப்பு: அதுவும் கொஞ்சம்
கஷ்டம் தான்)..

## நான்
சொல்வது உண்மையா?
இல்லையா? என்று உங்கள்
கருத்துக்களை கூறுங்கள்..

உங்கள் கணினியில் கட்டாயம் இருக்க வேண்டிய மென்பொருள்கள்



கணினி பயன்படுத்தும் நமக்கு பல மென்பொருள்கள் தேவைப்படும் . நாம் நமது கணினியில் நிறைய மென்பொருள்கள் சேமித்து அல்லது பதிந்து வைத்திருப்போம் . அனைத்தும் அனைத்து நேரமும் பயன்படாது . சில மென்பொருள்கள் நமது கணினியில் கண்டிப்பாக இருக்க வேண்டும் . அப்படி உங்கள் 
கணினியில் கட்டாயம் இருக்க வேண்டிய சில மென்பொருள்கள் உங்களுக்காக ..


1. Syslock 1.2.1


நீங்கள் கணினியில் ஏதாவது வேலை செய்யும்  போது சில சமயம் சிறிது நேரம் ஒய்வு எடுக்க நினைக்கலாம் . அப்பாது கணினியை அணைக்காமல் கணினிதிரையை மட்டும்  பூட்டி  வைக்க இது உதவுகின்றது .

For Download :  Syslock 1.2.1


2. Free screenshot capture

நமது பதிவில் ஏதாவது screen shot  இணைக்க விரும்பினால் அதை எடுக்க உதவும் மென்பொருள் இது .

 For Download :  Free screenshot capture

3. Image2 ocr

ஸ்கேன் செய்த பக்கங்கள் எப்பொழுதும் Image போர்மட்டில் இருக்கும் . அவற்றை எழுத்துகளாக மாற்ற இது உதவும் .


For Download : Image2 ocr

4. Hamster Video Converter

எந்த வீடியோ வாக இருந்தாலும் நீங்கள் விரும்பும் பார்மட்க்கு மாற்ற உதவும் மென்பொருள் இது 

 For Download :Hamster Video Converter

மாதம் மாதம் இலவச RECHARGE செய்ய வேண்டுமா ?

ஆன்லைன் இல்  நாம் எப்படி எளிதாக மாதம் மாதம் இலவசமாக RECHARGE செய்துகொள்ளலாம் என பார்ப்போம் .



  • முதலில் இந்த link இல் சென்று இணையவும்
  • இதில் இணைந்து விட்டால் நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு இலவசமாகSMS  அனுப்பலாம் .
  • நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு SMS க்கும் உங்கள் கணக்கில் இரண்டு பைசா ஏறும்.
  • உதாரணமாக உங்கள் நண்பர்கள் 100 பேரின் எண்களை  இதில் பதிய வைத்து கொள்ளுங்கள் . (Contact List Option உண்டு )
  • தினமும் நீங்கள் இணையம் பயன் படுத்தும் போது காலை மாலை இரவு என தினமும் நான்கு முறை அனைவருக்கும் Group SMS அனுப்புங்கள் .
  • அப்படி அனுப்பினால் 400 x 0.02 =  8 rs உங்கள் கணக்கில் ஏறும .
  • தினமும் 8 எனில் மாதம் 240 ருபாய் உங்கள் கணக்கில் ஏறும .
  • குறைந்தது 100 ருபாய் ஏறினால் கூட அதை உங்கள் RECHARGEசெலவில் குறைத்து கொள்ளலாம் அல்லவா ?
  • இதில் உங்கள் நண்பர்களை இணைப்பதன் மூலம் உங்கள் கணக்கில் இன்னும் பணத்தை அதிகரிக்கலாம் .

ONLINE இல் உங்கள் கோப்புகளை சேமிக்க வேண்டுமா?


நாம் தினமும் பல வகையான கோப்புகளை கையாள்வோம் . அவற்றில் சில மிக முக்கியமான கோப்புகளாக இருக்கும் . அவற்றை நாம் பல வருடங்களுக்கு பயன் படுத்த வேண்டி இருக்கலாம் . அல்லது முக்கியமானதாக , ரகசியமானதாக , பத்திரமாக வைக்க வேண்டிய கோப்புகளாக இருக்கலாம் . 

நமது கணினியில் சேமித்து வைக்கும் கோப்புகள் , கணினி பழித்து அடைந்தாலோ அல்லது HARD DISK FORMAT ஆனாலோ அழிய வாய்ப்பு உள்ளது . கோப்புகளை PEN DRIVE OR CD, DVD இல் சேமிக்கலாம் . ஆனாலும் அதும் நீண்ட நாள் வரும் என சொல்ல முடியாது . நமது கோப்புகளை ONLINE இல் சேமித்தால் நீண்ட நாள் இருக்கும் .

இப்படி சேமிக்க பல நிறுவனங்கள் இடம் தருகின்றன . அவற்றை பற்றிதான் இன்றய பதிவில் பார்க்க போகிறோம் .


1.  GOOGLE DRIVE :


            சமிபத்தில் வந்து அனைவரும் போன்படுத்தும் தளம் இது . இதில்நீங்கள் அதிக பட்சம் 5 GB வரை உங்கள் கோப்புகளை சேமிக்கலாம் . இதில் இணைய ஒரே கண்டிஷன் உங்களிடம் GMAIL ACCOUNT இருக்கவேண்டும் . பல கணக்குகள் முலம் நீங்கள் உங்கள் GB  எண்ணிக்கைய உயர்த்தலாம் .

இந்த தளம் செல்ல :  CLICK HERE



2. HOT FILES

              இதுவும் மேலே உள்ளது போலதான் . உங்கள் கோப்புகளை எளிதில் UPLOAD செய்யலாம் . யாருக்கு வேண்டுமானாலும் SHARE செய்யலாம் . ஆனால் அந்த தளத்தில் SHARE செய்தீர்கள் என சொல்வார்கள் . நீங்கள் செய்யலாம் .


இந்த தளம் செல்ல : CLICK HERE


3. ZIDDU


          இதில் இணைய எந்த மெயில் அக்கௌன்ட் இருந்தாலும் பரவாயில்லை . இதில் மிக மிக எளிதில் கோப்புகளை UPLOAD செய்யலாம் . நிறைய FREE SOTWARE அளிக்கும் தளங்கள் இதைதான் பயன்படுத்துகின்றனர் .


இந்த தளம் செல்ல : CLICK HERE


4. MEDIAFIRE 

        ZIDDU போலவே மிக பிரபலமான தளம் இது . இதில் இணைய ஏதேனும் ஒரு மெயில் அக்கௌன்ட் இருந்தால் போதும் . இதில் கோப்புகளை மொத்தமாக UPLOAD செய்யலாம் . உங்கள் கோப்புகளை மற்றவருடன் எளிதில் பகிரலாம் .


இந்த தளம் செல்ல :  CLICK HERE

Thursday, 14 March 2013

கூந்தல் பராமரிப்பு

பெண்களில் பலருக்கு கூந்தலை பராமரிப்பதில் அலாதி பிரியம். தற்போதைய அவசர வாழ்க்கையில் சரியாக பராமரிக்க முடிவதில்லை. சிலருக்கு  கழுத்துக்கு கீழே கூந்தல் வளருவதில்லை என்ற ஏக்கமும் இருக்கும். மருத்துவ ரீதியான பல்வேறு காரணங்கள் தலைமுடி வளர்வதில் உள்ளது.  இதை ஆரம்பத்திலேயே தெரிந்து கொண்டு அதற்கேற்ப பராமரிப்பில் கவனம் செலுத்தினால் போதும். 


வைட்டமின் ஏ குறைவாக இருப்பவர்களுக்கு முடி வளராது. வைட்டமின் ஈ குறைவாக இருந்தால் முடி வலுவாகவோ அல்லது அடர்த்தியாகவோ  இல்லாமல் அடிக்கடி உதிர ஆரம்பித்து விடும். சின்ன விஷயங்களில் கவனம் செலுத்தினாலே போதும். உங்கள் கூந்தலுக்கு வாசனை உண்டா  இல்லையா என்பதை வீட்டில் வைத்து ஒரு பட்டிமன்றமே நடத்தலாம்.

தலைமுடி நன்றாக வளர நெல்லிக்காய்,கடுக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்றையும் அரைத்து தேங்காய் பாலுடன் கலந்து தலையில் தடவி  அரைமணி நேரம் ஊறவைத்து குளிக்க வேண்டும். இது முடி நன்றாக வளர உதவுவதோடு மயிர்க் கால்களையும் நன்றாக வலுவாக்கும். சடாமஞ்சனை  நல்லெண்ணெயில் காய்ச்சி வாரம் ஒரு முறை தலைக்கு குளித்து வந்தால் தலைமுடி நன்றாகவும் அடர்த்தியாகவும் நீண்டும் வளரும். 

மருதாணி இலையை அரைத்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி வடிகட்டி தேய்த்து வந்தால் முடி செழித்து வளர உதவும்.காரட், எலுமிச்சைப் பழ சாறு  கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து தேய்த்து வந்தால் முடி வளர உதவும். செம்பருத்திபூவை நல்லெண்ணெயில் காய்ச்சி தலையில் தடவ முடி  நன்கு வளரும்.

புழுவெட்டு தலையா...: 

மாதுளம் பழம் சாறு தடவ முடி வளரும், ஆற்றுத் தும்மட்டியை நறுக்கி தேய்த்து வந்தால் முடி வளரும். முடி கொட்டுவதை தவிர்க்க...: முடி  கொட்டாமல் இருக்கவும், பொடுகிலிருந்து தலையைப் பாதுகாக்கவும் புளித்த தயிரில் மருதாணி இலை, செம்பருத்திப் பூ ஆகியவற்றைப் போட்டு  மூன்றையும் சேர்த்து அரைத்து கலக்கி தலையில் பூசி இரண்டு மணி நேரம் ஊற வைத்து பின் சீயக்காய் தூள் போட்டு குளிர்ந்த நீரில் குளித்து  வந்தால் முடி கொட்டாது பொடுகும் வராது.

வெந்தயத்தை நீரில் ஊறவைத்து பசை போல அரைத்து குளிர் சாதன பெட்டியில் வைத்து தினமும் குளிப்பதற்கு முன்பாக தலையில் நன்கு தேய்த்து  அரைமணி நேரம் நன்கு ஊறவைத்து பின் தலைக்கு குளிக்க வேண்டும். இதே போல் தொடர்ந்து ஒரு மாதம் செய்து வந்தால் நிச்சயமாக முடி  உதிர்வது நின்றுவிடும். 

முடி உதிர்வது நிற்க கோபுரம் தாங்கி இலை சாறு எடுத்து நல்லெண்ணெயில் காய்ச்சி தலை முழுகினால் முடி உதிர்வது நிற்கும். தினசரி காலை  எழுந்தவுடன் 15 நிமிடங்களுக்கு விரல்களால் தலையை நன்கு மசாஜ் செய்வதன் மூலம் வேர்கால்களுக்கு இரத்த ஒட்டத்தை அதிகப்படுத்தி வேர்  கால்களின் பலவீனத்தை போக்கும்.